search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லீவார்டு தீவுகளை அச்சுறுத்தும் மரியா புயல்: போர்ட்டோ ரிகோ, விர்ஜின் தீவுகளையும் தாக்கும் அபாயம்
    X

    லீவார்டு தீவுகளை அச்சுறுத்தும் மரியா புயல்: போர்ட்டோ ரிகோ, விர்ஜின் தீவுகளையும் தாக்கும் அபாயம்

    அட்லாண்டிக் கடலில் உருவாகி உள்ள மரியா புயல் அதிதீவிரமடைந்து கரீபியன் மற்றும் லீவார்டு தீவுகளை தாக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    கரீபியன் தீவுகள் மற்றும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இர்மா புயலின் பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நிலையில், புதிதாக மற்றொரு புயல் உருவாகி உள்ளது. மரியா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலும் கரீபியன் தீவுகளை நோக்கி முன்னேறுகிறது.

    இர்மா புயல் நகர்ந்த அதே பாதையில் இந்த புயலும் நகர்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் புயல் மேலும் வலுவடைவதுடன், லீவார்டு தீவுகளை இன்று தாக்கும் என அமெரிக்காவின் தேசிய புயல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புயல் லீவார்டு தீவுகளை தாக்கும்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதால் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    குவாதலூப், டொமினிகா, மர்த்தினிக், செயின்ட் கிட்ஸ் நெவிஸ், மான்செராட், போர்ட்டோ ரிகோ ஆகிய தீவுகளுக்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த ஆபத்து விளைவிக்கும் 4-ம் வகை புயலாக மாறும்போது போர்ட்டோ ரிகோ மற்றும் விர்ஜின் தீவுகளை புதன்கிழமை தாக்கலாம் என்றும், அந்த சமயத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    Next Story
    ×