search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ருமேனியாவில் புயல் தாக்கி 8 பேர் பலி: மின்சாரம்-குடிநீர் சப்ளை துண்டிப்பு
    X

    ருமேனியாவில் புயல் தாக்கி 8 பேர் பலி: மின்சாரம்-குடிநீர் சப்ளை துண்டிப்பு

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் நேற்று கடும் புயல் தாக்கியதில் 8 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் மின்சாரம், குடிநீர் சப்ளையும் பாதிக்கப்பட்டள்ளது.
    புகாரெஸ்ட்:

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் நேற்று கடும் புயல் தாக்கியது. அதில் திமிசோயரா நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    அங்கு மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. மழையும் கொட்டியது. புயல் மழையில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.

    தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மின்சாரம், குடிநீர் சப்ளையும் பாதிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாததால் திமி சேநாயரா நகரம் இருளில் மூழ்கியது.

    புயல் மழைக்கு இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். 67 பேர் காயம் அடைந்தனர். அவசர உதவியில் மீட்புக்குழுக்கள் ஈடுபட்டுள்ளன.



    வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டாம் என்றும் மரங்கள் மற்றும் மின்சார கம்பங்கள் அருகே நிற்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். தற்போது புயல் ருமேனியாவில் இருந்து உக்ரைன் நோக்கி செல்கிறது.
    Next Story
    ×