search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடுமுறையை கழிக்க இலங்கை வந்த பிரிட்டன் பத்திரிகையாளர் முதலை கடித்து உயிரிழந்த சோகம்
    X

    விடுமுறையை கழிக்க இலங்கை வந்த பிரிட்டன் பத்திரிகையாளர் முதலை கடித்து உயிரிழந்த சோகம்

    விடுமுறையை கழிப்பதற்காக நண்பர்களுடன் இலங்கைக்கு வந்த பிரிட்டன் பத்திரிகையாளர், முதலை கடித்து உயிரிழந்த சம்பவம் அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    கொழும்பு:

    பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகையாளர் பால் மெக்லன் (வயது 24). லண்டனில் இருந்து வெளியாகும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளரான இவர், விடுமுறையை கழிப்பதற்காக நண்பர்களுடன் இலங்கை வந்திருந்தார். நேற்று பிற்பகல் பனாமா கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அப்போது, கடலை ஒட்டியுள்ள நீர்நிலையில் பால் மெக்லன் இறங்கி கால் கழுவியுள்ளார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த முதலை அவரை கடித்து உள்ளே இழுத்துச் சென்றுவிட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரைத் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க வில்லை. இந்நிலையில், இன்று பால் மெக்லன் உடல், அந்த நீர்ப்பரப்பின் சகதிக்குள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காலில் ஆறேழு இடங்களில் காயம் இருந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரது மறைவால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். பைனான்சியல் டைம்ஸ் ஆசிரியர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    பால் மெக்லன் சடலம் பிரேத பரிசோதனைக்குப் பின்னர், அவரது நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிகிறது.
    Next Story
    ×