search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு விருது - அமெரிக்கா மார்கோனி சொசைட்டி அறிவிப்பு
    X

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு விருது - அமெரிக்கா மார்கோனி சொசைட்டி அறிவிப்பு

    இந்திய வம்சாளியைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்க உள்ளதாக அமெரிக்காவின் மார்கோனி சொசைட்டி அறிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ரேடியோவை கண்டுபிடித்த விஞ்ஞானியான மார்கோனியின் நினைவாக ஆண்டுதோறும் பல ஆராய்ச்சியாளர்களுக்கு விருது வழங்கப்படும். அதே போன்று இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரைச் சேர்ந்த அனந்த தீர்த்த சுரேஷ் என்பவர் கூகுள் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக நியூயார்க்கில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பால் பரன் இளம் அறிஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாடர்ன் கம்யூனிகேஷன்ஸ் துறையில் இந்திய வம்சாவளியான தாமஸ் காய்லத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. மேலும் அருண் நேந்திரவல்லி என்பவருக்கு டிஜிட்டல் வீடியோ டெக்னாலஜி துறையில் மார்கோனி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×