search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவை யாராலும் அச்சுறுத்த முடியாது: அதிபர் டொனால்ட் டிரம்ப்
    X

    அமெரிக்காவை யாராலும் அச்சுறுத்த முடியாது: அதிபர் டொனால்ட் டிரம்ப்

    அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்குதல் நினைவு தினத்தில் கலந்து கொண்ட அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவை யாராலும் அச்சுறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்குதல் நினைவு தினத்தில் கலந்து கொண்ட அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவை யாராலும் அச்சுறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரத்தில் செயல்பட்டு வந்த உலக வர்த்தக மையத்தின் மீது செப்டம்பர் 11ஆ‌ம் தே‌தி அல்-கொய்தா தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். வர்த்தக மையம் மீது விமானங்களால் மோதி தகர்த்ததில் 3,000 பேர் கொல்லப்பட்டனர். 6,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்நிலையில், இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், அமெரிக்காவை யாராலும் அச்சுறுத்த முடியாது. நாங்கள் ஒற்றுமையாக இருந்து வருகிறோம். உலகில் உள்ள எந்த சக்தியாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

    இரட்டை கோபுர தாக்குதலில் தீவிரவாதிகளுடன் துணிச்சலாக சண்டையிட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரின் வீரத்தை டிரம்ப் நினைவு கூர்ந்தார். இதில் அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அமெரிக்க அதிபராக பதவியேற்றபின் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ளும் முதல் இரட்டை கோபுர தாக்குதலுக்கான அஞ்சலி நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×