search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மியான்மர்: ஒருமாதம் போர்நிறுத்தம் செய்வதாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு
    X

    மியான்மர்: ஒருமாதம் போர்நிறுத்தம் செய்வதாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

    மியான்மரில் ராணுவத்திடம் சண்டையிட்டு வரும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் கிளர்ச்சியாளர்கள் அமைப்பு ஒருமாத காலம் போர்நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
    யாங்கூன்:

    மியான்மர் நாட்டின் ராகினே மாகாணத்தில் பவுத்தர்களுடன், வங்காள தேசத்தை பூர்விகமாகக் கொண்ட ரோஹிங்யா முஸ்லிம்களும் பெருவாரியாக வாழ்கின்றனர். கிட்டத்தட்ட 11 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கு வாழ்கின்றனர்.

    ஆனால் அவர்கள் நீண்டகாலமாக பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாவதாக சொல்லப்படுகிறது. அவர்கள் மீது மியான்மர் பாதுகாப்பு படைகளும், சில பவுத்த மத குழுக்களும் கூட தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக ரோஹிங்யா போராளிகள் ‘தி அராக்கன் ரோஹிங்யா சால்வேசன் ஆர்மி’ என்ற பெயரில் ஒரு போராளி குழு இயங்கி வருகிறது.

    இந்த போராளிகள் குழுவினர் கலவரங்களை தூண்டுவதாகவும், கிராம தலைவர்கள், அரசு உளவாளிகள் ஆகியோரை கொல்வதாகவும், தகவல் தொடர்பு அமைப்புகளுக்கு இடையூறுகள் செய்வதாகவும் அரசு குற்றம் சாட்டுகிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ரோஹிங்யா முஸ்லிம் போராளிகளுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரித்தன. ராணுவத்தின் அத்துமீறல்களால் சுமார் 3 லட்சம் முஸ்லிம்கள் வங்கதேசத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

    தற்போதைய சூழ்நிலையில் பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா இனத்தவர்கள் பலியான நிலையில், கிளர்ச்சியாளர்கள் ஒருமாதம் போர்நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த தகவலை தங்களது ட்விட்டர் பக்கத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மனிதாபிமானத்தை கணக்கில் கொண்டு இந்த போர்நிறுத்தம் மேற்கொண்டுள்ளதாகவும், மியான்மர் ராணுவம் மனிதாபிமான ரீதியில் இதை அணுக வேண்டும் என கிளர்ச்சியாளர்கள் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
    Next Story
    ×