search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மியான்மர் பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார்கள்: ஆங்சாங் சூகி குற்றச்சாட்டு
    X

    மியான்மர் பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார்கள்: ஆங்சாங் சூகி குற்றச்சாட்டு

    மியான்மர் நாட்டை பற்றி பெரிய அளவில் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என அந்நாட்டில் தலைவர் ஆங்சாங் சூகி கூறியுள்ளார்.
    யாங்கூன்:

    மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா என்ற முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இதனால் அந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி வங்காள தேசத்துக்கு அகதிகளாக ஓடுகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணுவ மற்றும் போலீஸ் சோதனை சாவடிகளை ரோஹிங்கியா ஆதரவாளர்கள் தாக்கினார்கள்.

    இதனால் தான் அங்கு மீண்டும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்துக்கு பிறகு 1 லட்சத்து 23 ஆயிரம் பேர் வங்காள தேசத்துக்கு அகதிகளாக சென்றுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த நாட்டின் தலைவர் ஆங்சாங் சூகி இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்காளதேசம் மற்றும் பல்வேறு முஸ்லிம் நாடுகள் வேண்டுகோள் விடுத்தன.

    இதைத்தொடர்ந்து ஆங்சாங் சூகி முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    எங்கள் நாட்டில் மோசமான செயல்பாடுகள் எதுவும் நடக்கவில்லை. மனித உரிமையை காக்கவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

    இங்கு வாழும் மக்களுக்கு பாதுகாப்பு உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசியல், சமூகம், மனித நேயம் அனைத்தும் பாதுகாப்பான நிலையில் உள்ளது.

    ஆனால், இந்த நாட்டை பற்றி பெரிய அளவில் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். பொய் படங்களை வெளியிட்டு பெரிய அளவில் கலவரம் நடப்பது போல் காட்டுகிறார்கள். இதை நம்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×