search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடும் விமர்சனத்துக்கு மத்தியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை நியாயப்படுத்திய மோடி
    X

    கடும் விமர்சனத்துக்கு மத்தியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை நியாயப்படுத்திய மோடி

    மியான்மரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை நியாயப்படுத்தி பேசினார்.
    யாங்கூன்:

    இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவும் மோடி தலைமையிலான மத்திய அரசு உயர் மதிப்பு கொண்ட பணத்தை திரும்ப பெற்று புதிய ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்தது. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதை பேரழிவு என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

    இந்நிலையில், மியான்மர் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை நியாயப்படுத்தி பேசினார்.

    யாங்கூனில் இந்திய வம்சாவளி மக்களிடையே மோடி பேசியதாவது:

    எனது தலைமையில் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் மத்திய அரசானது, நாட்டின் நலன் கருதி மிகப்பெரிய மற்றும் கடுமையான சில முடிவுகளை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 8-ம்தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சர்ஜிகல் தாக்குதல் நடத்தியது. ஜூலை 1-ம் தேதி ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியது.

    கருப்பு பணத்தை கொண்டு வருவதற்காகவும் ஊழலை ஒழிப்பதற்காகவும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோடிக்கணக்கில் பணத்தை வங்கியில் வைத்து, வருமான வரி செலுத்தாத லட்சக்கணக்கான மக்களை அடையாளம் காட்ட இந்த நடவடிக்கை உதவியது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×