search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்த திட்டம்: தென்கொரியா தகவல்
    X

    வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்த திட்டம்: தென்கொரியா தகவல்

    வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது என தென்கொரியா ராணுவ மந்திரி சங் யங்-மோ தெரிவித்துள்ளார்.

    சியோல்:

    எதிர்ப்புகள் மற்றும் கண்டனங்களை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் மிகவும் சக்தி வாய்ந்த அணுஆயுத சோதனை நடத்தியது.

    அது எந்தவிதமான ஏவுகணை சோதனை என்று தெரியாமல் இருந்த நிலையில் அது ‘ஹைட்ரஜன் குண்டு’ சோதனை என்று வடகொரியா அறிவித்துள்ளது. அதுவரை நடத்திய அனைத்து அணுஆயுத சோதனையை விட இது மிகவும் சக்தி வாய்ந்தது எனவும் தெரியவித்தது.

    அது குறித்து தென் கொரியா கருத்து தெரிவித்துள்ளது. வடகொரியா நடத்திய ஹைட்ரஜன் குண்டு 50 கிலோ டன் எடை கொண்டது. இதற்கு முன் நடந்த அணுஆயுத சோதனைகளை விட 5 மடங்கு சக்தி கொண்டது என கூறியுள்ளது.

    மேலும் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ஹைட்ரஜன் குண்டு சோதனையை தொடர்ந்து வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் அது எங்கு இச்சோதனை நடத்தும் என துல்லியமாக தெரியவில்லை. அதேநேரத்தில் பசிபிக் கடலுக்குள் வீசி சோதனை நடத்தும் என எதிர் பார்ப்பதாக தென்கொரியா ராணுவ மந்திரி சங் யங்-மோ தெரிவித்துள்ளார். மேலும் வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தினால் அதை சமாளிக்க தென்கொரியா மற்றும் அமெரிக்கா எதிர்ப்பு ஏவுகனைகளை நிறுவவும் முடிவு செய்துள்ளன.

    வடகொரியா நடத்திய ஹைட்ரஜன் குண்டு சோதனைக்கு பிறகு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் இதுகுறித்து நிரூபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் நடப்பதை பார்த்து கொண்டிருக்கிறோம் என பதில் அளித்தார். அதை தொடர்ந்து நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிங் அவசர கூட்டத்தில் அமெரிக்க பிரதிநிதி நிக்கிகாது கலந்து கொண்டு பேசினார் அப்போது, வட கொரியா போருக்காக அமெரிக்காவிடம் கெஞ்சுகிறது என பேசினார்.

    Next Story
    ×