search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாளம்: வெள்ளத்தில் பலியானவர்களில் 19 பேர் மாணவர்கள் - அரசு தகவல்
    X

    நேபாளம்: வெள்ளத்தில் பலியானவர்களில் 19 பேர் மாணவர்கள் - அரசு தகவல்

    நேபாளம் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களில் 19 பேர் மாணவர்கள் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    காத்மாண்டு:

    நேபாளம் நாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி பலர் பலியாகினர். சித்வான், மக்வான்பூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், “இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 500 பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 19 மாணவர்கள் பலியாகி உள்ளனர். ஜாபா மற்றும் சுன்சாரி மாவட்டங்களில் சேதம் கணக்கெடுக்கப்படவில்லை.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளி கட்டிடங்களில் தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சப்தாரி மாவட்டத்தில் சுமார் 20 மில்லியன் ரூபாய் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதேபோல், இயற்கை பேரழிவால் தன்ஷுவா மாவட்டத்தில் உள்ள 26 பள்ளிகளில் சுமார் 6.6 மில்லியன் ரூபாய் அளவுக்கு சேதமடைந்துள்ளது’’ என தெரிவித்துள்ளனர்.

    இந்தாண்டில் இதுவரை 150 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×