search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்கா எங்களை மரியாதையாக நடத்த வேண்டும் - பாகிஸ்தான் ராணுவ தளபதி
    X

    அமெரிக்கா எங்களை மரியாதையாக நடத்த வேண்டும் - பாகிஸ்தான் ராணுவ தளபதி

    பாகிஸ்தானுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா அடுக்கியுள்ள நிலையில், அமெரிக்காவிடம் எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை, மரியாதையாக நடத்துங்கள் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா அடுக்கியுள்ள நிலையில், அமெரிக்காவிடம் எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை, மரியாதையாக நடத்துங்கள் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெற்காசியாவுக்கான புதிய கொள்கையை நேற்று முன்தினம் வெளியிட்டார். அதில், தாலிபான்களை ஒழித்துக்கட்டும் வகையில் ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகளை அனுப்ப முடிவெடுக்கப்பட்டிருந்தது. மேலும், தாலிபான்கள், ஹக்கானி உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் மறைமுகமாக உதவுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தொடர்ந்து தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படும் பட்சத்தில் கடும் விளைவுகளை பாகிஸ்தான் எதிர்க்கொள்ள வேண்டியவரும் எனவும் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். தேவைப்பட்டால் பாகிஸ்தானுக்குள் சென்று அதிரடி தாக்குதல்களை நடத்துவோம் என அமெரிக்க உள்துறை மந்திரி ட்ரில்லர்சன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.



    தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளால் கடுப்பாகியுள்ள பாகிஸ்தான் சமாளிக்கும் விதமாக பல கருத்துக்களை கூறியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தானை போல யாரும் போரிட்டது இல்லை என நேற்று அந்நாட்டின் வெளியுறவு மந்திரி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அந்நாட்டின் ராணுவ தளபதி ஜாவீத் பஜ்வா இஸ்லாபாத்தில் அமெரிக்க தூதரை நேற்று சந்தித்து புதிய கொள்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, “நாங்கள் அமெரிக்காவிடம் இருந்து பொருள் அல்லது நிதிஉதவியை எதிர்பார்க்கவில்லை, எங்களுடைய பங்களிப்புக்கு நம்பிக்கை, புரிதல் மற்றும் அங்கீகாரத்தையே எதிர்பார்க்கிறோம்,” என பஜ்வா கூறியுள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ பாகிஸ்தான் என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது என அவர் அமெரிக்க தூதரிடம் பட்டியலிட்டு காட்டியுள்ளார்.
    Next Story
    ×