search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மர்மப்பை கண்டெடுக்கப்பட்டதால் வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடல் - தீவிர சோதனை
    X

    மர்மப்பை கண்டெடுக்கப்பட்டதால் வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடல் - தீவிர சோதனை

    அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வமான இல்லமான வெள்ளை மாளிகையின் வளாகத்தில் சந்தேகத்திற்குரிய பார்சல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் தற்காலிகமாக வெள்ளை மாளிகை மூடப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வமான இல்லமான வெள்ளை மாளிகையின் வளாகத்தில் சந்தேகத்திற்குரிய பார்சல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் தற்காலிகமாக வெள்ளை மாளிகை மூடப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை வாஷிங்டன் நகரில் உள்ளது. இந்நிலையில், உள்ளூர் நேரப்படி பகல் 1.30 மணியளவில் வெள்ளை மாளிகையின் வடக்குப்பகுதியில் உள்ள வேலி அருகே சந்தேகப்படும் வகையில் மர்மப்பை கிடந்துள்ளது.

    இதனையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் வெள்ளை மாளிகையை தற்காலிகமாக மூடி தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இல்லை. அரிசோனா மாகாணத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×