search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிஜி தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு
    X

    பிஜி தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

    பசிபிக் கடலில் நியூசிலாந்து அருகே பிஜிதீவுகள் உள்ளது. அங்கு இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.

    வெல்லிங்டன்:

    பசிபிக் கடலில் நியூசிலாந்து அருகே பிஜிதீவுகள் உள்ளது. அங்கு இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.

    இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். பின்னர் பாதுகாப்பான இடங்களில் தங்கினர். அங்கு 6.4 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கிழக்கு சுவா பகுதியில் பூமிக்கு அடியில் 538 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம், உயிரிழப்பு, காயம் போன்ற எந்தவித தகவலும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடவில்லை.

    பிஜிதீவு பசிபிக்கடலில் பூகம்ப அபாய பகுதியில் உள்ளது. இதனால் இங்கு அடிக்கடி இதுபோன்ற நிலநடுக்கங்கள் உருவாகின்றன.

    Next Story
    ×