search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க மேல்சபை தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி பெண் டாக்டர்
    X

    அமெரிக்க மேல்சபை தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி பெண் டாக்டர்

    அமெரிக்க பாராளுமன்ற மேல்சபைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ஹிரால் திபிர்னேனி தீர்மானித்துள்ளார்.
    நியூயார்க்:

    அமெரிக்க பாராளுமன்ற மேல்சபைக்கு வரும் 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அரிசோனா மாநிலம் எட்டாவது மாவட்டத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடப் போவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ஹிரால் டிபிர்னேனி அறிவித்துள்ளார்.

    87 சதவீதம் அமெரிக்கர்களும் 2.8 சதவீதம் ஆசிய மக்களும் வாழ்ந்துவரும் இந்த தொகுதியின் மேல்சபை உறுப்பினராக ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த டிரென்ட் பிராங்க்ஸ் தற்போது பதவி வகித்து வருகிறார்.

    இந்தியாவில் இருந்து பெற்றோருடன் தனது மூன்றாவது வயதில் அமெரிக்காவில் குடியேறிய ஹிரால் டிபிர்னேனி, டாக்டர் பட்டம் பெற்று மார்பக புற்றுநோய், குதவாய் புற்றுநோய் மற்றும் இளம் குழந்தைகளை தாக்கும் லூக்கேமியா என்னும் கொடிய புற்றுநோய் தொடர்பாக ஆராய்ச்சி செய்துவரும் சிறப்பு மருத்துவர்கள் குழுமத்துக்கு தலைமை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேல்சபை தேர்தலில் போட்டியிடும் முடிவு பற்றி கருத்து தெரிவித்த டாக்டர் ஹிரால் டிபிர்னேனி, நான் தொழில்முறை அரசியல்வாதி கிடையாது. ஆனால், அனைத்து தரப்பு மக்களுடனும் இணைந்து அவர்களுக்காக பணியாற்றி வந்துள்ளேன். இங்குள்ள மக்களின் நலன்களுக்காக குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியினரின் ஆதரவுடன் செயல்பட்டு தேவையான முன்னேற்றத்தை கொண்டு வருவேன் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×