search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை கடற்படை தளபதியாக முதன் முறையாக தமிழர் நியமனம்
    X

    இலங்கை கடற்படை தளபதியாக முதன் முறையாக தமிழர் நியமனம்

    இலங்கை கடற்படை தளபதியாக முதன் முறையாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை கடற்படையின் 21-வது தளபதி ஆக பொறுப்பு ஏற்க உள்ளார்.

    கொழும்பு:

    இலங்கை கடற்படை தளபதியாக பதவி வகிக்கும் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ராணுவ தலைமை தளபதியாக நியமிக்கப்பட உள்ளார்.

    எனவே அவருக்கு பதிலாக ரியட் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழர் ஆவார். இலங்கை கடற்படையின் 21-வது தளபதி ஆக பொறுப்பு ஏற்க உள்ளார்.

    அதற்கான உத்தரவை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பிறப்பித்துள்ளார். இலங்கையில் 30 ஆண்டு காலம் உள்நாட்டு போர் நடைபெற்றது. அதன் பின்னர் முதன் முறையாக இலங்கையின் முப்படைகளில் ஒன்றான கடற்படைக்கு தமிழர் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ரியட் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா கண்டியை சேர்ந்தவர். அங்குள்ள ரினிட்டி கல்லூரியில் ஆரம்ப கல்வியை முடித்தார். பின்னர் கடற்படையின் திரிகோணமலை கல்லூரியில் கெடட் அதிகாரி பட்டப்படிப்பை முடித்தார்.

    ராஜபக்சே ஆட்சியின் போது அவரது தம்பியும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்த பயவினால் ஓரம் கட்டப்பட்டார். தற்போது ஆட்சி மாற்றத்துக்கு பின் அதிபர் மைத்ரிபால, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான தேசிய அரசு பதவியேற்றதும் முக்கிய பதவி பெற்றுள்ளார்.

    Next Story
    ×