search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென் ஆப்பிரிக்காவில் மாடல் அழகியை தாக்கிய ஜிம்பாப்வே அதிபர் மனைவி மீது வழக்கு
    X

    தென் ஆப்பிரிக்காவில் மாடல் அழகியை தாக்கிய ஜிம்பாப்வே அதிபர் மனைவி மீது வழக்கு

    தென் ஆப்பிரிக்காவில் லோகன்ஸ் பார்க் ஓட்டலில் தங்கி இருந்த ஜிம்பாப்வே அதிபர் மனைவி, மாடல் அழகியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    ஜோகன்ஸ்பர்க்:

    ஜிம்பாப்வே அதிபராக ராபர்ட் முகாபே (93) பதவி வகிக்கிறார். அவரது 2-வது மனைவி கிரேஸ் முகாபே (52). இவர் தென் ஆப்பிரிக்கா சென்று இருந்தார். அவரது இரண்டு மகன்களும் உடன் சென்றனர்.

    லோகன்ஸ் பார்க் ஓட்டலில் தங்கியிருந்தபோது கபிரியல்லா ஏஞ்சல்ஸ் என்ற 20 வயது மாடல் அழகியின் தலையில் தாக்கி காயம் ஏற்படுத்தினார்.

    தன்னுடைய மகன்களை சந்தித்து மாடல் அழகி பேசியதால் ஆத்திரம் அடைந்த கிரேஸ் முகாபே தாக்கியதாக கூறப்படுகிறது.

    மாடல் அழகி கபிரியல்லா ஏஞ்சல்ஸ் அளித்த புகாரின்பேரில் ஜோன்ஸ்பார்க் போலீசார் முகாபே மனைவி கிரேஸ் மீது வழக்குபதிவு செய்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் அவர் திடீரென ஜிம்பாப்வே திரும்பி விட்டார்.

    Next Story
    ×