search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    நேபாளத்துக்கு இந்தியா 30 ஆம்புலன்ஸ்கள், 6 பஸ்கள் நன்கொடை

    நேச நாடான நேபாளத்துக்கு 30 ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஆறு பஸ்களை இந்தியா இன்று நன்கொடையாக வழங்கியது. 61 நூலகங்களுக்கு புத்தகங்களும் அளிக்கப்பட்டன.
    காத்மாண்டு:

    இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதேபோல் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் மூவர்ணக் கொடிகள் ஏற்றப்பட்டு சுதந்திர தின விழாக்கள் எழுச்சியாக கொண்டாடப்பட்டது.

    இவ்வகையில், நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நேபாளத்துக்கான தூதர் மஞ்சீவ் சிங் பூரி தேசியக் கொடியை ஏற்றினார். இந்திய ஜனாதிபதி வெளியிட்ட சுதந்திர தின உரையை அவர் வாசித்தார்.

    அப்போது, நேபாளத்துக்கு இந்தியா நன்கொடையாக அளித்த 30 ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஆறு பஸ்களின் சாவியை பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் மஞ்சீவ் சிங் பூரி ஒப்படைத்தார்.

    அங்கு உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு 57.3 கோடி நேபாள ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். மேலும், 61 நூலகங்கள் மற்றும் கல்விக்கூடங்களுக்கு புத்தகங்களும் அன்பளிப்பாக அளிக்கப்பட்டன என காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×