search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய அரசியல் நிர்ணய சபைக்கு முழு அதிகாரம் உண்டு: வெனிசுலா அதிபர் மதுரோ திட்டவட்டம்
    X

    புதிய அரசியல் நிர்ணய சபைக்கு முழு அதிகாரம் உண்டு: வெனிசுலா அதிபர் மதுரோ திட்டவட்டம்

    வெனிசுலாவில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் நிர்ணய சபைக்கு முழு அதிகாரம் உள்ளதாக அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
    கராகஸ்:

    வெனிசுலாவில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் நிர்ணய சபைக்கு முழு அதிகாரம் உள்ளதாக அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    வெனிசுலா நாட்டில் புதிய அரசியல் சட்டம் உருவாக்குவதற்கான நிர்ணய சபை தேர்தல் கடந்த மாதம் 30-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் அதிபர் நிக்கோலஸ் மதுரோ முழு அதிகாரத்தையும் தன் வசமாக்கிக்கொள்ள ஏதுவாக நியாயமற்ற முறையில் நடைபெற்றதாக கூறி அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன.

    மேலும், அதிபரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், சர்ச்சைகளுக்கும், குழப்பங்களுக்கும் மத்தியில் அரசியல் நிர்ணய சபை பதவியேற்ற பிறகு முதல் முறையாக நிக்கோலஸ் மதுரோ பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அப்போது, வெனிசுலாவில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அரசியல் நிர்ணய சபை, முழு அதிகாரத்தையும் கொண்டது என அவர் மீண்டும் உறுதியாகத் தெரிவித்துள்ளார். அரசின் மற்ற அனைத்து பிரிவுகளை விட அதிக அதிகாரங்களை அரசியல் நிர்ணய சபை கொண்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×