search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச போட்டியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்திய ராணுவ பீரங்கிகள் பாதியிலேயே பழுது
    X

    சர்வதேச போட்டியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்திய ராணுவ பீரங்கிகள் பாதியிலேயே பழுது

    ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச ராணுவ பீரங்கிகளுக்கான போட்டியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியா சார்பில் பங்கேற்ற இரு பீரங்கிகள் பாதியிலேயே பழுதாகி நின்றது.
    மாஸ்கோ:

    ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச ராணுவ பீரங்கிகளுக்கான போட்டியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியா சார்பில் பங்கேற்ற இரு பீரங்கிகள் பாதியிலேயே பழுதாகி நின்றது.

    ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் சர்வதேச ராணுவ பீரங்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் இந்தியா, சீனா உள்ளிட்ட 19 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இந்தியா சார்பில் டி-90 ரக இரண்டு பீரங்கிகள் இந்த போட்டியில் பங்கு பெற்றன.

    இந்நிலையில், போட்டியில் கலந்து கொண்டுள்ள நாடுகளின் பீரங்கிகள் இலக்கை அடைய வேண்டிய கட்டத்தின் போது, இந்திய பீரங்கிகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதி வழியிலேயே நின்றது. இதனால், இந்தியா போட்டியிலிருந்து இந்தியா வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    கடந்த 2013-ம் ஆண்டு முதல் இது போன்ற சர்வதேச ராணுவ போட்டிகள் நடந்து வருகின்றது. இந்திய பீரங்கியான டி-90 ரஷ்ய தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், பெலாரஸ் ஆகிய நாடுகள் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
    Next Story
    ×