search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன தலைநகரில் இடி மின்னலுடன் தொடர் மழை: 360 விமானங்கள் ரத்து
    X

    சீன தலைநகரில் இடி மின்னலுடன் தொடர் மழை: 360 விமானங்கள் ரத்து

    சீனாவில் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை பெய்து வருவதால் இன்று 360 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    பீஜிங்:

    சீனாவில் தலைநகர் பீஜிங்கில் இன்று இடி மின்னலுடன் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. தலைநகரை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    மலைப்பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மழை பெய்வதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    தொடர்ந்து மழை பெய்ததால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பீஜிங் சர்வதேச விமான நிலையத்தில் மட்டும் 360 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆற்றங்கரை அருகில் உள்ள ஷாங்காய், நான்ஜிங், ஹாங்சோவ் ஆகிய விமான நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

    இன்று பிற்பகல் மழை ஓரளவு தணிந்தபோதிலும், முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியிருந்தது. சுற்றுலா பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டன.
    Next Story
    ×