search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோக்லாம் எல்லைப் பிரச்சனை அமைதியாக தீர்க்கப்படும்: பூடான் நம்பிக்கை
    X

    டோக்லாம் எல்லைப் பிரச்சனை அமைதியாக தீர்க்கப்படும்: பூடான் நம்பிக்கை

    சுஷ்மா சுவராஜை சந்தித்த பூடான் வெளியுறவுத் துறை மந்திரி டாம்சோ டோர்ஜி டோக்லாம் எல்லைப் பிரச்சனை அமைதியாக தீர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    காத்மண்டு:

    சிக்கிம் எல்லை அருகே உள்ள டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைத்ததை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. அங்கு இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ள நிலையில், இந்தியா தனது படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    ஆனால் சிக்கிம் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற முடியாது என இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால் இந்தியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வோம் என சீனா மிரட்டி வருகிறது. இதனால் சுமார் 2 மாதங்களாக அங்கு போர் பதற்றம் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே டோக்லாம் பகுதியில் பூடான் சார்பில் இந்தியா நுழைந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ள சீனா, இதைப்போல காஷ்மீரில் பாகிஸ்தான் சார்பில் நாங்கள் நுழைந்தால் என்ன செய்வீர்கள்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது. எனவே டோக்லாம் விவகாரம் தொடர்ந்து நீறுபூத்த நெருப்பாக புகைந்து வருகிறது.

    இந்நிலையில்,
    டோக்லாம் எல்லைப் பிரச்சனை அமைதியாகவும், இணக்கமாகவும் தீர்க்கப்படும் என்று சுஷ்மா சுவராஜை சந்தித்த பூடான் வெளியுறவுத் துறை மந்திரி டாம்சோ டோர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். டோக்லாம் எல்லைப் பிரச்சனையில் பூடான் தனது நிலைப்பாட்டை முதல் முறையாக தெரிவித்துள்ளது.

    நேபாள நாட்டில் நடைபெற்ற பிம்ஸ்டெக் வெளியுறவுத் துறை மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்ள சுஷ்மா சுவராஜ் காத்மண்டு சென்ற போது, டாம்சோ டோர்ஜியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது என்ன பேசப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
    Next Story
    ×