search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதவிலக்கு பெண்களை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்தால் ஜெயில்: நேபாளத்தில் புதிய சட்டம்
    X

    மாதவிலக்கு பெண்களை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்தால் ஜெயில்: நேபாளத்தில் புதிய சட்டம்

    நேபாளத்தில் மாதவிலக்கு பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பினால் 3 மாதம் ஜெயில் தண்டனை, 3 ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற புதிய சட்டத்தை பாராளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
    காத்மாண்டு:

    நேபாள நாட்டில் பல சமூகங்களில் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால் அவர்களை வீட்டுக்குள் அனுமதிப்பது இல்லை. அவர்களை தனியாக குடிசை கட்டி அங்கு தங்க வைக்கிறார்கள்.

    இதற்காக ஒவ்வொரு ஊரிலும், அதையொட்டியுள்ள காட்டு பகுதிகளில் சாகுகோத் என்ற பெயரில் தனி குடிசை அமைக்கப்படுகிறது. மாதவிலக்கு ஏற்பட்டதும் பெண்கள் அங்கு சென்று தங்கிவிட வேண்டும். அவர்கள் ஆடு, மாடுகளையோ, உணவு பொருட்களையோ ஆண்களையோ, மத சம்மந்தப்பட்ட பொருட்களையோ தொடக்கூடாது.

    கடந்த ஆண்டு இதேபோல ஊரில் மாதவிலக்கு ஏற்பட்டு குடிசையில் தங்கி இருந்தபோது அந்த குடிசையில் திடீரென தீபிடித்தது. இதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். இதுமட்டுமல்லாமல் இங்கு தங்கி இருக்கும் பெண்களுக்கு போதிய மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதி இருப்பது இல்லை. விலங்குகள், வி‌ஷ சந்துகளாலும் மற்றும் நோய் காரணங்களாலும் அவர்கள் உயிரிழப்பும் அதிகமாக உள்ளது.

    எனவே இதற்கு எதிராக சமூக அமைப்புகள் போராடி வந்தன. ஏற்கனவே இந்த நடைமுறைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருந்தது. ஆனாலும் அது முறையாக அமல்படுத்தப்படவில்லை.

    இந்த நிலையில் இப்போது புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இது பாராளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டப்படி மாதவிலக்கு பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பினால் அவர்களுக்கு 3 மாதம் ஜெயில் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
    Next Story
    ×