search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கோ: போலீஸ் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே பயங்கர மோதல் - 14 பேர் பலி
    X

    காங்கோ: போலீஸ் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே பயங்கர மோதல் - 14 பேர் பலி

    காங்கோ நாட்டில் அதிபர் ஜோசப் கபிலாவுக்கு எதிராக செயல்பட்டுவந்த கிளர்ச்சியாளர்களில் 14 பேர் பாதுகாப்பு படையினர் உடனான மோதலில் கொல்லப்பட்டனர்.
    கின்ஷாசா:

    மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் அதிபர் ஜோசப் கபிலா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. அதிபருக்கு எதிராக அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் செயல்பட்டுவருகின்றது. கிளர்ச்சியாளர்கள் கைது செய்து அடைக்கப்படுவதும், பின்னர் சிறைகளை உடைத்து அவர்கள் தப்பிப்பதும் அங்கு வாடிக்கையான ஒன்றாக இருந்துவருகிறது.

    இந்நிலையில், முக்கிய கிளர்ச்சிக் குழுவான பி.டி.கே., கின்ஷாசா நகரில் உள்ள சிறையை உடைத்து அங்குள்ள தனது ஆதரவாளர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டது. அப்போது, பாதுகாப்பு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.

    மோதல் கலவரமாக மாறிய நிலையில், கிளர்ச்சியாளர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 14 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த மோதலில் ஒரு போலீஸ் அதிகாரி
    கொல்லப்பட்டதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மே மாதத்தில் இதே சிறையில் பி.டி.கே., நடத்திய சிறை உடைப்பு சம்பவத்தில் இக்குழுவின் தலைவர் உள்பட 4000 கைதிகள் தப்பித்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×