search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடனான பேச்சுவார்த்தை முற்றிலும் வெளிப்படையானது: முன்னாள் ரஷிய தூதர் தகவல்
    X

    அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடனான பேச்சுவார்த்தை முற்றிலும் வெளிப்படையானது: முன்னாள் ரஷிய தூதர் தகவல்

    அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாடுகளின் உறவு குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. மேலும் அது முற்றிலும் வெளிப்படையானது என அமெரிக்காவிற்கான முன்னாள் ரஷிய தூதர் தெரிவித்துள்ளார்.

    மாஸ்கோ:

    ரஷியாவின் அமெரிக்க தூதராக செயல்பட்டு வந்தவர் செர்ஜி கிஸ்லியாக். இவரது பதவிக்காலம் கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்தது. இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு எதிராக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். இதுதொடர்பான விசாரணைகளை அமெரிக்கா நடத்தி வருகிறது.

    இந்நிலையில், அவர் தூதராக இருந்தபோது அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகராக இருந்த மைக்கேல் பிளின்னை சந்தித்து பேசியது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்த சந்திப்பின் போது அதிபர் தேர்தல் குறித்தான பேச்சுவார்த்தைகள் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

    அதைத்தொடர்ந்து, மைக்கேல் பிளின்னை கட்டாயமாக பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி பதவி விலக செய்தனர். 

    இதுதொடர்பாக இன்று நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது பேசிய செர்கி கிஸ்லியாக் கூறியதாவது:-

    எங்கள் இருவருக்கிடையிலான சந்திப்பின் போது மிகவும் எளிதான விசயங்களே விவாதிக்கப்பட்டன. அது முழுவதும் சரியானது, அமைதியானது மற்றும் முற்றிலும் வெளிப்படையானது. அதில் எங்கள் பக்கம் எந்தவித ரகசியமும் இல்லை. இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது முக்கியமாக தீவிரவாத பிரச்சனைகளில் இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×