search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசுக்கு எதிராக வெனிசுலா நாட்டில் மக்கள் கொந்தளிப்பு: கலவரம் ஏற்படும் அபாயம்
    X

    அரசுக்கு எதிராக வெனிசுலா நாட்டில் மக்கள் கொந்தளிப்பு: கலவரம் ஏற்படும் அபாயம்

    அரசுக்கு எதிராக வெனிசுலா நாட்டில் மக்கள் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த நேரத்திலும் கலவரம் பெரிய அளவில் வெடிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    கராகஸ்:

    தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள வெனிசுலா நாட்டில் அரசியல் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நாட்டின் அதிபர் மடுரோவாவுக்கு எதிராக கடந்த 4 மாதமாக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்குவதற்கு அதிபர் ராணுவத்தையும், போலீசாரையும் ஏவி வருகிறார்.

    இந்த நிலையில் தனக்கு சாதகமாக நாட்டின் சட்ட திட்டங்களை மாற்றுவதற்கு அதிபர் முயற்சித்து வருகிறார்.

    இதற்காக அரசியல் சட்டங்களை மாற்ற உள்ளார். அரசியல் சட்டங்களை மாற்றுவதற்கு என்று தனி உறுப்பினர் குழு உள்ளது. இதில், புதிய குழுவை தேர்வு செய்து அரசியல் சட்டங்களை மாற்ற அவர் திட்டமிட்டுள்ளார். இந்த குழுவுக்கான தேர்தல் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

    அரசியல் சட்டத்தை மாற்ற கூடாது, புதிய குழு தேர்தல் நடத்த கூடாது என்று மக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது ராணுவத்தினரும், போலீசாரும் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.

    இந்த தாக்குதல்களால் இதுவரை 105 பேர் பலியாகி உள்ளனர்.

    தேர்தலுக்கு இன்றும் 2 நாட்கள் தான் இருக்கும் நிலையில் நாடு முழுவதும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த நேரத்திலும் கலவரம் பெரிய அளவில் வெடிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    வெனிசுலாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த அதிகாரிகள் அனைவரும் குடும்பத்தினருடன் இந்த நாட்டை விட்டு வெளியேறி ஊர் திரும்பும்படி அமெரிக்கா உத்தர விட்டுள்ளது. அங்குள்ள கலவர சூழ்நிலையால் அந்த நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

    Next Story
    ×