search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    1,400 ஈராக்கியர்களை வெளியேற்ற தடை: அமெரிக்க நீதிபதி அதிரடி உத்தரவு
    X

    1,400 ஈராக்கியர்களை வெளியேற்ற தடை: அமெரிக்க நீதிபதி அதிரடி உத்தரவு

    அமெரிக்காவில் இருந்து 1,400 ஈராக்கியர்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரியில் பொறுப்பேற்றார். அப்போது, ஈரான், ஏமன், சோமாலியா, லிபியா, சூடான், சிரியா உள்ளிட்ட 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். டிரம்பின் இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, டிரம்பின் உத்தரவுக்கு மிச்சிகன் நீதிமன்றம் தடை விதித்தது. இதைதொடர்ந்து, தடை விதிக்கப்பட்டுள்ள ஆறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களின் நெருங்கிய உறவினர்கள் (அத்தை, மாமா, பேரக் குழந்தைகள், வருங்கால கணவர், வருங்கால மனைவி, அம்மா, அப்பா) அமெரிக்காவில் தங்கியிருந்தால் அதனை உறுதி செய்த பிறகு அவர்களுக்கு விசா அளிக்கப்படும் என தடை உத்தரவில் அமெரிக்க அரசு திருத்தம் கொண்டு வந்தது.



    ஆனாலும், அமெரிக்காவில் வசிப்பவர்களின் உறவினர் எனக்கூறி தங்கி இருப்பவர்களை கண்டறிந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் குடியுரிமை துறை அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.

    அவர்கள் நடத்திய சோதனையில், முறையான விசா இன்றி தங்கியிருந்த 199 ஈராக்கியர்கள் உள்பட, அமெரிக்காவில் வசிப்பவர்களின் உறவினர்கள் எனக்கூறி தங்கியுள்ள 1,444 ஈராக்கியர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் குடியுரிமை துறை அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.

    இதுதொடர்பாக, மிச்சிகன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அமெரிக்காவில் வசிப்பவர்களின் உறவினர்களை வெளியேற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் குடியுரிமை துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

    இந்த மனுவை விசாரித்த மிச்சிகன் நீதிமன்ற நீதிபதி, 1.444 ஈராக்கியர்களை அமெரிக்காவை விட்டு வெளியேற்றக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார்.
    Next Story
    ×