search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இத்தாலியில் கடும் வறட்சி: வாடிகனில் அலங்கார நீரூற்றுகள் மூடப்பட்டன
    X

    இத்தாலியில் கடும் வறட்சி: வாடிகனில் அலங்கார நீரூற்றுகள் மூடப்பட்டன

    வறட்சி காரணமாக வாடிகனில் உள்ள புகழ் பெற்ற நினைவு சின்னங்களாக திகழும் 2 அலங்கார நீரூற்றுகள் மூடப்பட்டன.
    வாடிகன் சிட்டி:

    இத்தாலியில் மழை இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் தலைநகர் ரோம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. பொது மக்கள் குடிநீர் இன்றி தவிக்கின்றனர்.

    எனவே, வாடிகனில் உள்ள அலங்கார நீரூற்றுகள் மூடப்பட்டு அதற்கு வரும் தண்ணீர் வரத்து நிறுத்தப்படுகிறது. வாடிகனில் புகழ் பெற்ற செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் 17-ம் நூற்றாண்டின் நினைவு சின்னங்களான கார்லோ மடர்னோ, ஜியான் லாரன்சோ பெர்னினி அலங்கார நீரூற்றுகள் உள்ளிட்ட 100 நீருற்றுகள் உள்ளன.

    தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வாடிகன் வரலாற்றில் முதன் முறையாக நினைவு சின்னங்களாக திகழும் 2 அலங்கார நீரூற்றுகள் மூடப்பட்டன. அவற்றில் இருந்து தண்ணீர் கொட்டாமல் வறண்டு கிடக்கின்றன.

    மேலும் 100 நீரூற்றுகளும் படிப்படியாக நிறுத்தப்படும். இதற்கான நடவடிக்கையை போப் ஆண்டவர் பிரான்சிஸ் மேற்கொண்டுள்ளார். வாடிகனில் செயற்கை அலங்கார நீரூற்றுகள் மூடப்பட்டது. இதுவே முதல் முறையாகும்.

    இத்தாலியில் கடந்த 60 ஆண்களில் தற்போது 3-வது முறையாக வறட்சி தாக்கியுள்ளது. வழக்கத்தை விட 74 சதவீதம் மழை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு 230 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×