search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயிலுக்காக சீனா பூமிக்கு அடியில் 31 மாடி ரெயில் நிலையம் கட்டுகிறது
    X

    மெட்ரோ ரெயிலுக்காக சீனா பூமிக்கு அடியில் 31 மாடி ரெயில் நிலையம் கட்டுகிறது

    சீனாவின் சாங்கிங் மாகாணத்தில் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையத்தில் பூமிக்கு அடியில் 94 மீட்டர் உயரத்தில் ரெயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு 31 அடிக்கு மாடிகள் கட்டப்படுகிறது.
    பெய்ஜிங்:

    ரெயில் போக்குவரத்தில் சீனா அதிவேகமாக முன்னேறி வருகிறது. புல்லட் ரெயில், சுரங்க பாதை ரெயில், பறக்கும் ரெயில் என சாதனை படைத்து வருகிறது.

    இந்த நிலையில் மெட்ரோ சுரங்க பாதை ரெயிலில் பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் பல அடுக்குமாடி கட்டிடங்களுடன் ரெயில் நிலையம் கட்டுகிறது.

    சீனாவின் சாங்கிங் மாகாணத்தில் ஹாங்டியூடி மெட்ரோ சுரங்க ரெயில் நிலையத்தில் பூமிக்கு அடியில் 94 மீட்டர் உயரத்தில் ரெயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு 31 அடிக்கு மாடிகள் கட்டப்படுகிறது.

    ரோட்டில் இருந்து பூமிக்கு அடியில் ரெயில் நிலையம் செல்ல நகரும் படிக்கட்டு (எக்ஸ்லேட்டர்) அமைக்கப்படுகிறது. அதன் மூலம் பூமிக்கு அடியில் உள்ள ரெயில்வே பிளாட்பாரங்களுக்கு 3 நிமிடத்தில் செல்ல முடியும்.

    அதன் மூலம் உலகில் உள்ள மிக ஆழமான மெட்ரோ ரெயில்களில் இதுவும் ஒன்று என்ற பெருமையை இது பெறுகிறது. தற்போது வடகொரியாவில் 110 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளது. இதுவே பூமிக்கு அடியில் உள்ள மிக ஆழமான மெட்ரோ நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
    Next Story
    ×