search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளவரசி டயானா பற்றி புதிய டாகுமெண்ட்ரி படம்: நாளை வெளியீடு
    X

    இளவரசி டயானா பற்றி புதிய டாகுமெண்ட்ரி படம்: நாளை வெளியீடு

    இங்கிலாந்து நாட்டின் மறைந்த இளவரசி டயானாவின் புதிய டாகுமெண்ட்ரி படம் நாளை வெளியிடப்படுகிறது என அரச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் அரச குடும்பத்தில் பிறந்து இளவரசராக வளர்ந்தவர் சார்லஸ். இவரை சாதாரண குடும்பத்தில் பிறந்த டயானா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வில்லியம், ஹாரி என இரண்டு மகன்கள் உள்ளனர். அரச குடும்பத்தில் வாழ்ந்து வந்தாலும், அனைவரிடமும் சரிசமமாக பழகி வந்ததால், இவர் அனைவராலும் விரும்பப்பட்டு வந்தார்.

    இதற்கிடையே, கடந்த 1997-ஆம் ஆண்டு பாரீசில் நடந்த கார் விபத்து ஒன்றில் டயானா உயிரிழந்தார். ஆனால், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அது கொலை அல்ல, எதிர்பாராத விதமாக நடந்த விபத்து தான் என அறிவித்தனர். ஆனாலும் அவரது மரணம் குறித்த சர்ச்சை தொடர்கிறது.

    இந்நிலையில், இளவரசி டயானா விபத்தில் இறந்து 20-வது ஆண்டு நினைவு தினம் அடுத்த மாதம் வரவுள்ளது. இதையடுத்து, இளவரசி டயானா தொடர்பாக புதிய டாகுமெண்ட்ரி படம் நாளை வெளியிடப்படும் என அவரது மகன்கள் தெரிவித்துள்ளனர்.
     


    இதுகுறித்து டாகுமெண்ட்ரி படத்தின் தயாரிப்பாளர் நிக் கெண்ட் கூறுகையில், ’டயானா, எங்கள் தாயார்: அவரது வாழ்வும் மரபும்’ என்ற தலைப்பில் டாகுமெண்ட்ரி படம் எடுக்கப்ப்ட்டுள்ளது. டயானா விபத்தில் பலியாகும் முன்னர் அவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்கள் உள்பட பலவற்றை இந்த படம் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் நீங்கள் டயானாவின் தனிப்பட்ட குணாதிசயங்களை அறிந்துகொள்ள முடியும்.

    டயானா நகைச்சுவை உணர்வு நிரம்ப பெற்றவர். அவரது வாழ்க்கையை அவரது மகன்களை தவிர வேறு யாரும் சரியாக சொல்லிவிட முடியாது. ஹெச்.ஐ.வி.யால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு உதவுதல் உள்ளிட்ட செயல்களால் சர்ச்சையில் சிக்கியது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இதில் விளக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தை தனது மகன்களுக்கு போட்டு காண்பித்த இளவரசர்கள் பிரின்ஸ் மற்றும் ஹாரி ஆகியோர், ’இவர்தான் உங்கள் பாட்டி’ எனக்கூறி பெருமைப்பட்டுள்ளனர். பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க தொலைக்காட்சிகளில் டயானா குறித்த டாகுமெண்ட்ரி படம் நாளை (ஜூலை 24) முதல் ஒளிபரப்பாக உள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×