search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லெபனான் பிரதமருக்கு அமெரிக்க வெள்ளை மாளிகையில் விருந்து
    X

    லெபனான் பிரதமருக்கு அமெரிக்க வெள்ளை மாளிகையில் விருந்து

    இஸ்ரேல் விவகாரத்தில் விரிசல் அடைந்துள்ள உறவுகளை புதுப்பிக்கும் வகையில் பாலஸ்தீன பிரதமருக்கு வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விருந்து அளிக்கிறார்.
    வாஷிங்டன்:

    பாலஸ்தீனத்தில் இருந்து ஒரு பகுதியை பிரித்து இஸ்ரேல் என்னும் தனிநாடு உருவாக பெருந்துணையாக இருந்த அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டை தனது கண்ணின் மணிபோல தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லையில் உள்ள காசா மற்றும் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் அத்துமீறல்களுக்கு எல்லாம் அமெரிக்கா தொடர்ந்து பக்கதாளம் போட்டு வருகிறது.

    இதனால், அமெரிக்க அரசின்மீது பாலஸ்தீன அரசு சற்று கோபத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்று கொண்ட டொனால்ட் டிரம்ப்புக்கு பாலஸ்தீன பிரதமர் சாத் அல் ஹரிரி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    அவருக்கு நன்றி தெரிவித்த டிரம்ப், அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதற்கிணங்க, வரும் 25-ம் தேதி அமெரிக்காவுக்கு வரும் பாலஸ்தீன பிரதமர் சாத் அல் ஹரிரி-க்கு வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விருந்து அளிக்கிறார்.

    இந்த சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் தீவிரவாதத்தை ஒழிப்பது, பாலஸ்தீன நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அகதிகள் மறுவாழ்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவார்கள் என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×