search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரி சீன் ஸ்பைசர் ராஜினாமா
    X

    டிரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரி சீன் ஸ்பைசர் ராஜினாமா

    அமெரிக்காவின் தகவல் தொடர்பு இயக்குநராக அந்தோனி ஸ்காராமுச்சி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு அதிகாரி பொறுப்பிலிருந்து சீன் ஸ்பைசர் ராஜினாமா செய்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் தகவல் தொடர்பு துறையின் இயக்குநராக இருந்த மைக் டுப்க், அதிபர் டிரம்ப் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் கடந்த மே மாதத்தில் ராஜினாமா செய்தார். இதனால், காலியாக இருந்த அப்பொறுப்புக்கு நியூயார்க்கைச் சேர்ந்த நிதியாளர் அந்தோனி ஸ்காராமுச்சியை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டார்.

    டிரம்ப்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு அதிகாரியாக இருந்த சீன் ஸ்பைசர் ராஜினாமா செய்துள்ளார். சீன் ஸ்பைசர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் தனது முடிவில் ஸ்பைசர் உறுதியால இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×