search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரெக்ஸிட் விவகாரம்: பிரிட்டனுக்கு நிபந்தனைகள் விதிக்கும் பிரான்ஸ்
    X

    பிரெக்ஸிட் விவகாரம்: பிரிட்டனுக்கு நிபந்தனைகள் விதிக்கும் பிரான்ஸ்

    ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டுமானால் 100 பில்லியன் யூரோக்களை பேச்சுவார்த்தை தொடங்கும் முன்னரே கொடுக்க வேண்டும் என பிரான்ஸ் நிபந்தனை விதித்துள்ளது.
    பாரிஸ்:

    ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டுமானால் 100 பில்லியன் யூரோக்களை பேச்சுவார்த்தை தொடங்கும் முன்னரே கொடுக்க வேண்டும் என பிரான்ஸ் நிபந்தனை விதித்துள்ளது.

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக பிரிட்டன் அறிவித்ததை அடுத்து, இதற்கான நடைமுறை பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பான விவாதங்கள் பிரான்ஸ் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

    அப்போது பேசிய, அந்நாட்டு பொருளாதார மந்திரி லீ மெயர், “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமென்றால் முதலில் 100 பில்லியன் யூரோக்களை செலுத்த வேண்டும். இதை பேச்சுவார்த்தை துவங்கும் முன்னரே செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், “ஐரோப்பிய ஒன்றியத்தின் பட்ஜெட்டிற்கு கொடுப்பதாக பிரிட்டன் ஒப்புக்கொண்டுள்ளபடி இப்பணத்தை கொடுக்க வேண்டும். இப்பணத்தைப் பற்றி பேரம் எதையும் பேச முடியாது. பிரிட்டன் வெளியேறும் பேச்சுவார்த்தை துவக்கும் முன்னரே இதைச் செலுத்த வேண்டும் என்றார் மெய்ரே. இதன் அளவு 115 பில்லியன் டாலர்கள் (100 பில்லியன் யூரோக்கள்) அளவிற்கு இருக்கலாம்” என்று மந்திரி பேசினார்.

    இங்கிலாந்து முன்னாள் பிரதமர் மார்க்கெரட் தாட்சர் கூறியது போல “எங்களுக்கு எங்களது பணம் திரும்ப கிடைக்க வேண்டும்” என்ற வாக்கியத்தை மேற்கோள் காட்டி மெய்ரே தனது உரையில் பேசினார்.
    Next Story
    ×