search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதற்கு லஞ்சம் தர முயன்ற முன்னாள் அமெரிக்க அதிபர்
    X

    பாகிஸ்தானில் அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதற்கு லஞ்சம் தர முயன்ற முன்னாள் அமெரிக்க அதிபர்

    பாகிஸ்தான் அணு ஆயுத சோதனைகளை நடத்தாமல் இருந்தால் அதற்கு பணம் தருவதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் கூறியதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தகவல் வெளியிட்டு உள்ளார்.
    கராச்சி:

    பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் குவிந்திருக்கும் நிலையில், பனாமா ஊழலிலும் சிக்கியுள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக தனது செல்வாக்கு குறைவதை உணர்ந்த அவர் பல உண்மைகளை வெளியிட்டு வருகிறார்.

    தற்போது அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் குறித்து ஒரு ரகசிய தகவலை அவர் வெளியிட்டிருக்கிறார். கடந்த 1998-ம் ஆண்டு பாகிஸ்தான் அணு ஆயுத சோதனையை நடத்தாமல் இருக்க கிளிண்டன் 5 பில்லியன் டாலர் தர முன் வந்ததாகக் கூறி உள்ளார். பாகிஸ்தான் மீது உள்ள தேசப்பற்றின் காரணமாக அதை நிராகரித்துவிட்டதாகவும் ஷெரீப் கூறியுள்ளார்.

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சியால்கோட் நகரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்டபோது, இந்த தகவலை தெரிவித்தார். 
    Next Story
    ×