search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்தின் இளம்வயது மருத்துவராகி இந்திய மாணவர் சாதனை
    X

    இங்கிலாந்தின் இளம்வயது மருத்துவராகி இந்திய மாணவர் சாதனை

    இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 22 வயதான அர்பன் ஜோஷி, அந்நாட்டின் இளம்வயது மருத்துவராக பணியாற்ற உள்ளார்.

    லண்டன்:

    இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் அர்பன் ஜோஷி. தற்போது இங்கிலாந்தில் வசித்துவரும் 22 வயதான ஜோஷி, அந்நாட்டின் இளம்வயது மருத்துவராகி சாதனை படைத்துள்ளார். 

    ஜோஷி, தனது 13-வது வயது வரை குஜராத்தின் காந்திநகரில் உள்ள ஒரு பள்ளியில் பயின்றுவந்துள்ளார். பின்னர் அவரது தந்தைக்கு பிரான்ஸ் நாட்டில் வேலை கிடைத்ததையடுத்து அவரது குடும்பம் பிரான்ஸ் நாட்டில் குடியேறியது. பின்னர் பிரான்ஸ் நாட்டில் தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்த ஜோஷி, தனது 17-வது வயது நிறைவேறிய உடன் பல்வேறு பல்கலைகழகங்களில் மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளார். 

    அவரது விண்ணப்பத்தை ஒரு பல்கலைகழகம் நிராகரித்தது. இருப்பினும் மூன்று பலகலைகழகங்கள் அவருக்கு வாய்ப்பளிக்க முன்வந்தன. செஃப்பீல்டு பல்கலைகழகம் அவரது திறமையை பாராட்டி அவருக்கு 13 ஆயிரம் பவுண்டுகள் உதவித்தொகை அளிக்கவும் முன்வந்தது. அவரது பெற்றோர் உதவியோடும், பகுதிநேரமாக ஒரு பள்ளியில் உணவு மேற்பார்வையாளராக பணியாற்றியும் தனது கல்வியை தொடர்ந்தார்.

    தற்போது 21 ஆண்டு 335 நாட்கள் வயது பூர்த்தியாகியுள்ள நிலையில் அவர் இங்கிலாந்தின் குறைந்த வயது மருத்துவராக அடுத்த மாதம் தனது பயிற்சியை தொடங்க உள்ளார். இதற்கு முன்னதாக 21 ஆண்டு 352 நாட்கள் வயது பூர்த்தியாகி நிலையில் ராச்செல் என்பவர் மருத்துவராக பயிற்சியை தொடங்கியதே சாதனையாக இருந்தது.

    இதுகுறித்து ஜோஷி கூறியதாவது, “இதய அறுவைசிகிச்சை நிபுணர் ஆகவேண்டும் என்பதே என் கனவு, ஆனால் அது மிகவும் கடினமான துறை. நான் ஒரு மருத்துவரானது எனக்கு பெரிய ஆச்சரியமாக இல்லை” என்றார்.
    Next Story
    ×