search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக திபெத் எல்லையில் படைகளை குவிக்கும் சீனா
    X

    இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக திபெத் எல்லையில் படைகளை குவிக்கும் சீனா

    இந்தியா - சீனா இடையே போர்ப்பதற்றம் நீடித்துவரும் நிலையில் திபெத் எல்லைப்பகுதியில் அதிகளவிலான ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
    பீஜிங்:

    இந்தியா - சீனா இடையே போர்ப்பதற்றம் நீடித்துவரும் நிலையில் திபெத் எல்லைப்பகுதியில் அதிகளவிலான ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    சிக்கிம் எல்லை அருகே இந்தியா - சீனா - பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோகாலா பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

    இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளதால், சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ளன. இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என கூறி வரும் சீனா, இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என மிரட்டி வருகிறது. இந்தியா ராணுவத்தை திரும்ப பெற முடியாது, அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறோம் என கூறிவிட்டது.

    இந்தியா ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என கூறிவரும் சீனா எல்லையில் அடிக்கடி போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்கு ஒரு மாதத்துக்கும் மேலாக போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது.
     
    இந்நிலையில், சீன ராணுவம் எல்லையை நோக்கி நகர்கிறது எனவும் கனரக போர் ஆயுதங்கள் திபெத் பகுதிக்கு செல்கிறது எனவும் சீன ராணுவ மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது. இந்தியாவுடனான எல்லையை கையாளும் சீனப் படைப்பிரிவின் கமாண்டோவின் உத்தரவின்படி , ராணுவம் வடக்கு திபெத்தின் குன்லுன் மலைப்பகுதியை நோக்கி ராணுவப்படைகள் செல்கிறது என சீன ராணுவ மீடியா தெரிவித்து உள்ளதாக ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சவுஸ் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டு உள்ளது.

    சீனாவின் ராணுவம் குறித்தான செய்தியாளர் நி லிசியாங் பேசுகையில், “ராணுவ தயார் நிலைக்கு பின்னரே பேச்சுவார்த்தை,” என குறிப்பிட்டு உள்ளார் என செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×