search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப் மனைவியை சோதித்த ஜி-20 எதிர்ப்பு போராட்டக்காரர்கள்
    X

    டிரம்ப் மனைவியை சோதித்த ஜி-20 எதிர்ப்பு போராட்டக்காரர்கள்

    ஜெர்மனி ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாட்டுக்கு எதிரான முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் போராட்டம் 2-வது நாளாக நடைபெற்றது. போராட்டத்தால் டிரம்ப் மனைவி மெலானியா முக்கியமான பயணத்தை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
    பெர்லின்:

    ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைத்தார். 

    உலக தலைவர்கள் ஒன்று கூடுவதால் ஹம்பர்க் நகரம் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதனிடையே, மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் லட்சக்கணக்கானோர் கருப்பு உடையணிந்து ஹம்பர்க் நகரில் மாநாட்டுக்கு முதல் நாள் ஒன்று கூடினர். “வெல்கம் டூ நரகம்” என்ற பதாகைகளை பிடித்து அனைத்து தலைவர்களுக்கும் தங்களது எதிர்ப்பை போராட்டக்காரர்கள் பதிவு செய்தனர்.

    இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும் படி எச்சரித்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் அசைந்து கொடுக்காததால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது, போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள் மற்றும் செங்கற்கள் வீசப்பட்டன.

    பின்னர், இரண்டாவது நாளகவும் முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் போராடம் நீடித்தது. ஹம்பர்க் நகரில் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்ற போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போராட்டக்காரர்கள் தடுப்பாண்களுக்கு தீ வைத்தனர். 



    தண்ணீரை பாய்ச்சி அடித்து தீயை அணைத்த போலீசார் வெள்ளிக்கிழமை மாலை போராட்டக்காரர்களை களைத்தனர். போராட்டத்தால் ஹம்பர் நகரம் முழுவதும் பதற்றமாக காணப்பட்டது.

    இதனிடையே, ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்களின் மனைவிகள் படகு பயணத்தை டிரம்ப் மனைவி செய்ய முடியாமல் போனாது. மெலானியா தங்கி இருந்த இடத்தை விட்டு வெளியேறுவது பாதுகாப்பானதாக இருக்காது என்று அமெரிக்கா பாதுகாப்பு குழு தெரிவித்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
    Next Story
    ×