search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யாழ்ப்பாணம் பகுதியில் தமிழர்களின் 54 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்தது இலங்கை ராணுவம்
    X

    யாழ்ப்பாணம் பகுதியில் தமிழர்களின் 54 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்தது இலங்கை ராணுவம்

    இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் தமிழர்களுக்கு சொந்தமான 54 ஏக்கர் நிலத்தை அவர்களிடம் ராணுவம் ஒப்படைத்துள்ளது.
    கொழும்பு:

    இலங்கையில் 30 ஆண்டுகளாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்தாலும், தமிழர்களின் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படாமல் உள்ளது. குறிப்பாக போர் பகுதியில் முகாமிட்டிருக்கும் ராணுவத்தை திரும்ப பெறவேண்டும், தமிழர்களின் நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில், சிறிசேனா தலைமையிலான ஆட்சி அமைந்தபின்னர் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இலங்கை ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டு வருகிறது.



    அவ்வகையில், போர் நடைபெற்ற யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள சுமார் 190 தமிழ் குடும்பங்களுக்கு சொந்தமான 54 ஏக்கர் நிலங்களை ராணுவம் விடுவித்து, உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்துள்ளது. அத்துடன், யாழ்ப்பாணம் மீன்பிடி துறைமுகமும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டுள்ளது.

    போர் காரணமாக 1990ம் ஆண்டு முதல் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழும் 187 குடும்பங்கள், இப்போது தங்கள் சொந்த இடத்திற்கு திரும்ப முடியும் என்றும், மீன்பிடி தொழிலை தொடங்கலாம் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×