search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு அரபு அமீரக நிறுவனம் நன்கொடை
    X

    வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு அரபு அமீரக நிறுவனம் நன்கொடை

    இலங்கையில் கடந்த மாதம் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 200 பேர் பலியான நிலையில் அந்நாட்டு அரசின் துயர் துடைக்கும் பணிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒரு லட்சம் டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளது.
    அபுதாபி:

    கேரள மாநிலம், திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த யூசுப் அலி என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையிடமான  அபுதாபியை மையமாக கொண்டு லுலு இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை நிறுவினார்.

    ஐக்கிய அரபு அமீரகத்துக்குட்பட்ட பல நாடுகளிலும், அமெரிக்கா மற்றும் பிறநாடுகளிலும் ‘லுலு ஹைப்பர் மார்க்கெட்’ எனப்படும் அதிநவீன பல்பொருள் சிறப்பு அங்காடிகளை நடத்தி வருகிறார்.

    இலங்கை மற்றும் கேரள மாநிலத்திலும் இவருக்கு சொந்தமான நிறுவனங்கள் உள்ளன. ரமலான் நோன்பு காலங்களிலும், துயர் துடைப்பு பணிகளுக்கும் இந்நிறுவனம் தாராளமாக நன்கொடைகளை அளித்து வருகிறது.

    இலங்கையில் கடந்த மாதம் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 200 பேர் பலியான நிலையில் அந்நாட்டு அரசின் துயர் துடைக்கும் பணிக்கு லுலு நிறுவனம் நிறுவனம் 3 லட்சத்து 68 ஆயிரம் திர்ஹம்களை (சுமார் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்) நன்கொடையாக அளித்துள்ளது.

    அபுதாபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த தொகைக்கான காசோலையை ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இலங்கை தூதர் எஸ்.ஜே. மொஹைதீனிடம் லுலு நிறுவனத்தின் தலைவர் யூசுப் அலி வழங்கினார்.

    2017-ம் ஆண்டை கொடை ஆண்டாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ள நிலையில் இலங்கையில் உதவிக்காக காத்திருக்கும் மக்களுக்கு இந்த சிறிய தொகையை அளிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக யூசுப் அலி குறிப்பிட்டார்.
    Next Story
    ×