search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காசாவில் ஹமாஸ் இயக்க தளங்கள் மீது தாக்குதல் - இஸ்ரேல் நடவடிக்கை
    X

    காசாவில் ஹமாஸ் இயக்க தளங்கள் மீது தாக்குதல் - இஸ்ரேல் நடவடிக்கை

    காசா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினரின் தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நேற்று முன்தினம் அதிரடியாக தாக்குதல்களை நடத்தியது.
    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மீது காசா பகுதியில் இருந்து ராக்கெட் வீச்சு நடந்தது. அதைத் தொடர்ந்து காசா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினரின் தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நேற்று முன்தினம் அதிரடியாக தாக்குதல்களை நடத்தியது. காசா, ரபா மற்றும் காசாவுக்கு வெளியே உள்ள ஒரு இடம் என 3 இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாலஸ்தீன படைகளும், பொதுமக்களும் இந்த தாக்குதலை உறுதி செய்தனர்.

    இந்த தாக்குதலில் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் கூறியது. ஆனால், ஹமாஸ் தளத்தின் அருகேயுள்ள வீட்டில் உள்ள ஒருவர், இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து ரத்தம் வழிந்த நிலையில் சிகிச்சைக்காக எடுத்துச்செல்லப்பட்டதாக ஊடகம் ஒன்றின் புகைப்பட கலைஞர் தெரிவித்துள்ளார்.



    இந்த தாக்குதல் பற்றி இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “ஹமாஸ் இயக்கத்தினருக்கு உரித்தான 2 கட்டமைப்புகளை குறி வைத்து இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் வான்தாக்குதல்கள் நடத்தின. அங்கிருந்து வந்த ராக்கெட் வீச்சுக்கு பதிலடி தரும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

    ஹமாஸ் இயக்கம், இஸ்ரேலை பாலஸ்தீனர்களுக்கு பெற்றுத்தந்து, இஸ்ரேல், மேற்குக்கரை, காசா பகுதிகளை ஒருங்கிணைத்து இஸ்லாமிய குடியரசாக மாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×