search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடிக்கு குஜராத்தி ஸ்பெஷல் உணவு வழங்கி அசத்திய போர்ச்சுகல் பிரதமர்
    X

    மோடிக்கு குஜராத்தி ஸ்பெஷல் உணவு வழங்கி அசத்திய போர்ச்சுகல் பிரதமர்

    போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் அண்டோனியோ கோஸ்டா குஜராத் மாநிலத்தின் ஸ்பெஷல் சைவ உணவுகளை வழங்கி அசத்தினார்.
    லிஸ்பன்:

    இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணத்தின் முதல்கட்டமாக இன்று போர்ச்சுகல் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போர்ச்சுகல் நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    போர்ச்சுகல் பிரதமர் அண்டோனியா கோஸ்டா மோடிக்கு அரசு மரியாதை அளித்து வரவேற்றார். அப்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த சுற்றுப்பயணம் அமையும் என மோடி குறிப்பிட்டார்.

    அதன்பின், பிரதமர் மோடிக்கு போர்ச்சுகல் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா மதிய விருந்து அளித்தார். அதில், குஜராத்தின் ஸ்பெஷல் உணவுகள் இருந்ததை கண்டு மோடி ஆச்சரியம் அடைந்தார்.

    குஜராத் மாநிலத்தின் ஆகு சாக் மற்றும் மேங்கோ ஷ்ரீகண்ட் உள்ளிட்ட ஸ்பெஷல் உணவுகளுடன் சாக் கோப்டா, ராஜ்மா அவுர் மகாய், டர்கா தால், கேசர் ரைஸ், பரந்தா, ரொட்டி, பப்பாட், குலாப்ஜாமுன் உள்ளிட்ட சிறப்பு உணவுகளையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

    முன்னதாக, போர்ச்சுகல் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா, இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×