search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்க பாகிஸ்தான் முடிவு
    X

    சீனர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்க பாகிஸ்தான் முடிவு

    பாகிஸ்தான் நாட்டிற்கு வருகை தரும் சீனர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    சீன பாகிஸ்தான் பொருளாதார திட்டம் காரணமாக பாகிஸ்தானில் வாழும் சீனர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இவர்களது பாதுகாப்பிற்காக பாகிஸ்தான் அரசு 15 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களை சீனர்கள் வாழும் பகுதியில் குவித்துள்ளது. 

    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டிற்கு வருகை தரும் சீனர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. 

    பலூசிஸ்தானில் உள்ள மஸ்தாங் மாவட்டத்தில் சீன நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் இந்த முடிவினை எடுத்துள்ளது.

    பாகிஸ்தான் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி கான் தலைமையில் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற உயர் மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.



    நட்பு ரீதியாக வழங்கப்படும் விசாக்கள் தவறுதலாக பயன்பட்டு விடக்கூடாது என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×