search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரான்ஸ்: போலீஸ் வேன் மீது காரை மோதி தாக்கியவன் ஐ.எஸ் விசுவாசி - விசாரணையில் தகவல்
    X

    பிரான்ஸ்: போலீஸ் வேன் மீது காரை மோதி தாக்கியவன் ஐ.எஸ் விசுவாசி - விசாரணையில் தகவல்

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போலீஸ் வேன் மீது ஆயுதங்களுடன் காரை மோத விட்டு தாக்கியவன் ஐ.எஸ் விசுவாசியாக இருக்கலாம் என விசாரணைக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போலீஸ் வேன் மீது ஆயுதங்களுடன் காரை மோத விட்டு தாக்கியவன் ஐ.எஸ் விசுவாசியாக இருக்கலாம் என விசாரணைக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் உள்ள சாம்ப்ஸ் லையீஸ் பகுதியில் நேற்று மர்மநபர் ஒருவர் வெள்ளை நிற காரில் ஆயுதங்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வேன் மீது வேண்டுமென்றே மோதி தாக்குதல் நிகழ்த்தினார்.

    சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அந்த இடத்தை முற்றுகையிட்டு போக்குவரத்தை தடை செய்தனர். காரை ஓட்டி வந்த மர்ம நபர் இறந்த நிலையில் காரில் கிடந்துள்ளார். மேலும், காரில் ரைபில், கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.

    இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் எனத் தெரிவித்திருந்த நகர போலீசார், காரை ஓட்டி வந்த மர்மநபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், காரை ஓட்டி வந்த நபர் ஐ.எஸ் விசுவாசியாக இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு சாட்சியாக பிரான்ஸ் அரசால் தேடப்பட்டு வந்த ஆதம் ஜாசிரி என்பவர் ஐ.எஸ் தலைவர் அல் பக்தாதிக்கு எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கண்டெடுத்துள்ளனர்.
    Next Story
    ×