search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடியோ: குளத்தில் தவறி விழுந்த குட்டி யானையை மீட்ட இரண்டு யானைகள்
    X

    வீடியோ: குளத்தில் தவறி விழுந்த குட்டி யானையை மீட்ட இரண்டு யானைகள்

    தென்கொரியா நாட்டில் குளத்தில் தவறி விழுந்த குட்டி யானையை சரியான நேரத்தில் இரண்டு யானைகள் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தென் கொரியா தலைநகரான சியோலில்  கிராண்ட் பார்க்  என்ற உயிரியல் பூங்கா உள்ளது. இந்த் பூங்காவில் சில தினங்களுக்கு முன்னர் இங்குள்ள குளத்தில் நீர் குடிப்பதற்காக குட்டி யானையை அழைத்துக்கொண்டு இரண்டு இளம் யானைகள் சென்றுள்ளது.


    இரண்டு யானைகளில் ஒன்று அருகில் இருந்த புல்வெளியில் நின்றுகொண்டிருக்க, குட்டி யானையும் பிற யானையும் தண்ணீர் குடிக்க முயன்றுள்ளன.


    அப்போது, எதிர்பாராத விதமாக குட்டி யானை குளத்தில் தவறி விழுந்துள்ளது. இக்காட்சியை கண்டு அருகில் இருந்த இளம் யானை அலறியதும் மற்றொரு யானையும் அங்கு விரைந்து சென்றுள்ளது.


    குட்டி யானையை காப்பாற்ற முயன்றபோது ஓடி வந்த யானை மற்ற யானை பிடித்து தள்ளி ‘கரைக்கு சென்று காப்பாற்றலாம்’ என்பது போல் சைகை காட்டுகிறது.


    பின்னர், இரண்டு யானைகளும் குளத்தின் நுழைவு பகுதிக்கு சென்று கண் இமைக்கும் நேரத்தில் தண்ணீருக்குள் ஓடிச்சென்று குட்டி யானையை இருபுறமும் அணைத்துக்கொள்கிறது.


    இதன் மூலம் குட்டி யானையின் தும்பிக்கை நீருக்கு மேல் வந்து மூச்சு வாங்க முடிந்துள்ளது. சில வினாடிகளில் குட்டி யானையை அழைத்துக்கொண்டு இரண்டு யானைகளும் கரைக்கு திரும்பியுள்ளன.


    இச்சம்பவம் நிகழ்ந்தபோது வேலிக்கு பின்னால் இருந்த மற்றொரு யானை ‘தன்னால் குட்டி யானையை காப்பாற்ற முடியவில்லை’ என்பது போல் அங்கும் இங்கும் அலைந்துக்கொண்டு இருப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.


    சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள இந்த உருக்கமான வீடியோவை இதுவரை சுமார் 5 லட்சம் பேர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×