search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை சர்வதேச யோகா தினம்: சீனாவில் களைகட்டும் பிரம்மாண்ட ஏற்பாடுகள்
    X

    நாளை சர்வதேச யோகா தினம்: சீனாவில் களைகட்டும் பிரம்மாண்ட ஏற்பாடுகள்

    சர்வதேச யோகா தினம் நாளை வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில், சீனாவில் சர்வதேச யோகா தினத்தை சிறப்பிக்க நாடு முழுக்க நடைபெற இருக்கும் விழாக்களில் சுமார் 20,000க்கும் அதிகமானோர் கலந்து கொள்கின்றனர்.
    பீஜிங்:

    சர்வதேச யோகா தினத்தின் மூன்றாம் ஆண்டு கொண்டாட்டங்கள் சீனாவில் வெகு விமர்சையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பீஜிங் நகரின் சீன பெருஞ்சுவர், நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள பூங்காக்களில் யோகா சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தப்படுகிறது. 2015-ம் ஆண்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து யோகா சார்ந்த நிகழ்வுகள் சீனாவில் பிரபலமாகி உள்ளது. 

    இதோடு சர்வதேச யோகா தினம் அனுசரிக்க ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கோரிக்கை விடுத்ததற்கு சீனா ஆதரவளித்தது. சர்வதேச யோகா தினத்தை அனுசரிப்பதற்கான அனுமதி பெற்று சீனாவின் யுனன் மின்சு பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக யோகா கல்லூரி ஒன்றை இந்தியா, சீனா சார்பில் துவங்கப்பட்டன.
    சீன பெருஞ்சுவரில் மாபெரும் யோகா தின விழா இன்று நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து சீனாவின் 12 நகரங்களில் யோகா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சிகளில் சுமார் 20,000-க்கும் அதிகமானோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    உலகில் யோகா தின கொண்டாட்டங்கள் இந்தியாவுக்கு அடுத்தப்படியாக வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நாடாக சீனா இருக்கும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். குவான்ஷொவில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ள விழாவில் இந்தியாவில் இருந்து யோகா பயிற்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர். 

    இந்தியா-சீனா யோகா கல்லூரி, டன்குவான், ஷோங்ஷான் மற்றும் ஃபோஷான் உள்ளிட்ட இடங்களில் ஐந்து நாட்கள் யோகா பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. யோகா பயிறச்சையை ஊக்குவிக்கும் வகையில் 20 பேர் கொண்ட யோகா பயிற்சியாளர்கள் நாடு முழுக்க யோகா பயிற்சிகளை வழங்க இருக்கின்றனர். 22 முதல் 30 வயதுடைய பத்து ஆண் பயிற்சியாளர்களும், பத்து பெண் பயிற்சியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். 

    இந்தியா, சீனா மட்டுமின்றி ஜப்பான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து கியூபா உள்ளிட்ட நாடுகளில் யோகா தினம் கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. அமெரிக்காவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகம் யோகா தினத்தை குறிக்கும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிரான்ஸ், அமெரிக்காவின் வாஷிங்டன், ஹங்கேரி, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் யோகா தினத்தை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×