search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆண்டுக்கு 1300 குழந்தைகள் பலி
    X

    அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆண்டுக்கு 1300 குழந்தைகள் பலி

    அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆண்டுக்கு 1300 குழந்தைகள் பலியாகின்றனர். 5800 பேர் காயம் அடைகிறார்கள்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் தனிநபர் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன.

    வீட்டில் பெற்றோர் வைத்திருக்கும் துப்பாக்கிகளை எடுத்து விளையாடும் குழந்தைகள் அதில் இருந்து வெளியாகும் குண்டுகள் பாய்ந்து உயிரிழுக்கும் அபாயம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே அங்கு துப்பாக்கி கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது.

    அதைத்தொடர்ந்து அங்கு துப்பாக்கியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது. நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையங்களை சேர்ந்த நிபுணர்கள் இதில் ஈடுபட்டனர்.

    அதில் துப்பாக்கி சூடு சம்பவத்தால் ஆண்டுக்கு சராசரி 1300 குழந்தைகள் பலியாகின்றனர். 5800 குழந்தைகளுக்கு காயம் ஏற்படுகிறது. இவர்களில் 82 சதவீதம் சிறுவர்கள் ஆவர். இதில் கறுப்பர் இன சிறுவர்கள் மிக அதிகம்.

    அதேநேரத்தில் துப்பாக்கி கலாசாரத்தால் நாள் ஒன்றுக்கு 19 குழந்தைகள் உயிரிழக்கிறார்கள். அல்லது காயம் அடைகிறார்கள். துப்பாக்கி சூட்டுக்கு பலியாகும் சிறுவர்- சிறுமிகள் அனைவரும் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. துப்பாக்கி சாவுகளில் பாதி அளவு கொலை வழக்குகளாகும். அதே நேரத்தில் 38 சதவீதம் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்படுகிறது.

    மன அழுத்தத்துக்கு ஆளாகும் குழந்தைகள் வீட்டில் இருக்கும் சர்வசாதாரணமாக துப்பாக்கியை எடுத்து சுட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். மற்றும் காதல் தோல்வியாலும், குடும்பத்தினரிடையே ஏற்படும் பிரச்சினையாலும் இத்தகைய தற்கொலைக்கு ஆளாகின்றனர்.

    துப்பாக்கியை வைத்து விளையாடும்போது வெடித்தும் குழந்தைகள் உயிரிழக்கின்றனர் என்பன போன்ற தகவல்கள் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×