search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போர்ச்சுகல் காட்டுத்தீ விபத்து: பலி எண்ணிக்கை 61 ஆனது - மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு
    X

    போர்ச்சுகல் காட்டுத்தீ விபத்து: பலி எண்ணிக்கை 61 ஆனது - மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு

    போர்சுகல் நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
    லிஸ்பன்:

    ஐரோப்பா கண்டத்தின் தென்பகுதியில் உள்ள போர்ச்சுகல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் நகரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கு வனப் பகுதியில் நேற்று திடீரென்று காட்டுத்தீ உண்டானது.

    மளமளவென பரவிய தீ காட்டில் இருந்த மரங்களை பதம் பார்த்ததுடன் காட்டின் ஓரமாக செல்லும் சாலையோரம் இருந்த மரங்களையும் பற்றியது. இதனால் அந்த சாலை வழியாக வாகனங்களில் கடந்து சென்றவர்கள் எரிந்த நிலையில் சாலையில் விழுந்த மரங்களால் முன்பக்கமோ, பின்பக்கமோ போக முடியாமல் சாலையின் நடுவில் வசமாக சிக்கிக் கொண்டனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தவாறு முன்னேறி சென்று கொண்டிருந்த நிலையில் சாலையில் நின்றிருந்த வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. 40-க்கும் அதிகமானோர் காரின் உள்ளேயே உடல்கருகி பலியாகினர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 21 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ”இது போன்ற கொடூர சம்பவத்தை இதற்கு முன்னதாக பார்த்தது இல்லை” என அந்நாட்டு பிரதமர் கவலையுடன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×