search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போர்ச்சுகல், நெதர்லாந்து, அமெரிக்காவில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்
    X

    போர்ச்சுகல், நெதர்லாந்து, அமெரிக்காவில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்

    பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ம் தேதியில் இருந்து அரசு முறைப் பயணமாக போர்ச்சுகல், நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ம் தேதியில் இருந்து அரசு முறைப் பயணமாக போர்ச்சுகல், நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 24-ம் தேதி போர்ச்சுகல் நாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடி, 25 மற்றும் 26 தேதிகளில் அமெரிக்காவில் தங்கி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் அந்நாட்டுக்கு முதன்முதலாக செல்லும் பிரதமர் மோடி - டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


    இந்த சந்திப்பின்போது இந்தியா - அமெரிக்கா இடையில் பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகாலாம். பழைய உறவுகளும் பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்க பயணத்தை தொடர்ந்து 27-ம் நெதர்லாந்து நாட்டுக்கு செல்லும் அவர் அங்கிருந்து டெல்லி திரும்புகிறார்.
    Next Story
    ×