search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூமிக்கு மேல் 550 கி.மீ. தூரத்தில் விண்வெளியில் எக்ஸ்ரே டெலஸ்கோப் நிறுவிய சீனா
    X

    பூமிக்கு மேல் 550 கி.மீ. தூரத்தில் விண்வெளியில் எக்ஸ்ரே டெலஸ்கோப் நிறுவிய சீனா

    பூமிக்கு மேல் 500 கி.மீ. தூரத்தில் விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் அறிய அதிநவீன எக்ஸ்ரே டெலஸ்கோப்பை சீனா நிறுவியுள்ளது.

    பெய்ஜிங்:

    விண்வெளி ஆராய்ச்சியில் சீனா முன்னேறி வருகிறது. அமெரிக்காவுக்கு போட்டியாக விண்வெளியில் தனியாக ஆய்வகம் அமைத்து வருகிறது. சந்திரனுக்கு ஆள் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்போது விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் அறிய அதிநவீன எக்ஸ்ரே டெலஸ்கோப்பை நிறுவியுள்ளது.

    2.5 டன் எடையுள்ள இந்த டெலஸ்கோப் மார்ச்-4பி ராக்கெட் மூலம் நேற்று விண்ணுக்கு அனுப்பப்பட்டது. வடமேற்கு சீனாவில் கோபி பாலைவனத்தில் உள்ள ஜியூகுயான் செயற்கை கோள் மையத்தில் இருந்து ஏவப்பட்டது.

    எக்ஸ்ரே டெலஸ்கோப்பை பூமிக்கு மேல் 550 கி.மீ. தூரத்தில் மார்ச்-4பி ராக்கெட் தூக்கி சென்று நிலை நிறுத்தியது. அதன் மூலம் வானத்தில் ஏற்படும் கருந்துளைகள், கடுமையான காந்த வயல்கள் மற்றும் வெடித்து சிதறும் காமாகதிர்களை விஞ்ஞானிகள் கண்டறிய முடியும்.

    Next Story
    ×