search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிரவாதத்திற்கு நிதியளிப்பதை கத்தார் நிறுத்த வேண்டும்: டிரம்ப் ஆவேசம்
    X

    தீவிரவாதத்திற்கு நிதியளிப்பதை கத்தார் நிறுத்த வேண்டும்: டிரம்ப் ஆவேசம்

    தீவிரவாத இயக்கங்களுக்கு மறைமுகமாக கத்தார் உதவுவதாக கூறி, அந்நாட்டுடனான தூதரக உறவை 7 நாடுகள் முறித்துள்ள நிலையில், தீவிரவாதத்திற்கு நிதியளிப்பதை கத்தார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    தீவிரவாத இயக்கங்களுக்கு மறைமுகமாக கத்தார் உதவுவதாக கூறி, அந்நாட்டுடனான தூதரக உறவை 7 நாடுகள் முறித்துள்ள நிலையில், தீவிரவாதத்திற்கு நிதியளிப்பதை கத்தார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    ஜ.எஸ்.தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி செய்வதாக குற்றம்சாட்டி கத்தாருடன் ஆன தூதரக உறவை சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், அமீரகம், லிபியா அரபு நாடுகள் துண்டித்தன. மேலும், மாலத்தீவுகளும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளது.



    இதனால் மேற்கண்ட நாடுகளுக்கிடையே விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தூதர்கள் திரும்ப பெறப்பட்டனர். மேலும் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் நிலவுகிறது. கத்தார் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. குறிப்பாக கத்தார் மீது தூதரக தடை விதித்த ஐந்து அரபு நாடுகள் இடையே சமரசம் ஏற்படுத்த குவைத்தும், துருக்கியும் ஈடுபட்டுள்ளன.

    துருக்கி அரசானது கத்தாருக்கு தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் ராணுவ உதவிகள் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், வெள்ளை மாளிகைக்கு ரோம் நாட்டின் அதிபர் லாவுஸ் ஜோஹான்னிஸ் வருகை தந்துள்ளார். அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கத்தார் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

    அதற்கு பதிலளித்த டிரம்ப்,” கத்தார் தவறுதலாக மிக அதிகளவிலான நிதியை தீவிரவாதத்திற்கு அளிக்கிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கூட்டங்களில் பேசப்பட்டது. கத்தார் தீவிரவாதத்திற்கு நிதியளிப்பதை நிறுத்த வேண்டும். வெறுப்புணர்வை விதைப்பதை நிறுத்த வேண்டும்” என பேசினார்.’

    மேலும், “ தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றினைய நான் அழைப்பு விடுக்கிறேன். சகிப்புத்தன்மையை கொல்பவர்களை தடுக்க அழைப்பு விடுக்கிறேன். மனிதர்களே மனிதர்களை கொல்லும் கொடூர பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்று கூட அழைப்பு விடுக்கிறேன்” எனவும் தெரிவித்தார்.

    கத்தார் மீது தடை விதித்துள்ள சவூதிக்கும் அதன் மன்னர் சல்மானுக்கும் தான் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தனது பேச்சில் டிரப் தெரிவித்தார்.
    Next Story
    ×