search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரண்டாவது முறையாக பிரதமராகும் தெரேசா மே-வுக்கு டிரம்ப், மேக்ரான் போனில் வாழ்த்து
    X

    இரண்டாவது முறையாக பிரதமராகும் தெரேசா மே-வுக்கு டிரம்ப், மேக்ரான் போனில் வாழ்த்து

    பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் அதிகமான இடங்களை வென்று மீண்டும் ஆட்சியமைக்க இருக்கும் தெரேசா மே-வுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோர் தொலைபேசி மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
    லண்டன்:

    பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் அதிகமான இடங்களை வென்று மீண்டும் ஆட்சியமைக்க இருக்கும் தெரேசா மே-வுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோர் தொலைபேசி மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    பிரிட்டன் பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் 2020-ம் ஆண்டு வரை இருந்த நிலையில். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு நாட்டில் வலிமை வாய்ந்த, நிலையான தலைமை தேவை என்று கூறி பாராளுமன்றத்துக்கு திடீர் தேர்தலை நடத்தப்போவதாக பிரதமர் தெரசா மே அறிவித்தார். இதற்கு பாராளுமன்றமும் ஒப்புதல் அளித்தது.

    அதைத்தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான நடைமுறைகள் தொடங்கின. இந்த தேர்தலில் பிரதமர் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.

    மொத்தமுள்ள 650 இடங்களுக்கும் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளில், கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 262 இடங்களிலும் வென்றது. இருப்பினும், ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைக்க உள்ளது.

    இந்நிலையில், இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் தெரேசா மே-வுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் தொலைபேசி மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். டிரம்ப் தனது பேச்சில், பிரிட்டனின் எந்த முடிவுக்கும் அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், இரு தலைவர்களும் தங்களது பேச்சில், இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு தொடரும் என வாக்குறுதியளித்துள்ளதாக பிரதமர் அலுவலக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×